பாகிஸ்தானில் திடீர் மழைவெள்ளத்தால் 30 பேர் பலி
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு, திடீர் மழைவெள்ளத்தால் 30 பேர் பலியாகினர்.
அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானின் பல்வேறு ஊர்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு உள்ளதால் வீடுகளின் மேற்கூரைகளில் அதிகளவில் பனி படர்ந்து, பாரம் தாங்காமல் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் 14 பேர் பலியாகினர்.
கடும் மழையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாகாணத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், இது தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மேலும் 5 பேர் இறந்தனர்.
இதற்கிடையில், குவெட்டா - சாமன் நெடுஞ்சாலையில் மண் சரிவு, வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைக்கும் கோசாக் - பாஸ் சாலை பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளது.
Comments