21 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க கோரிக்கை

0 917

21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தாக்கல் செய்துள்ள அந்த மசோதாவில், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ.72 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments