வரும் நிதியாண்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாகவே இருக்கும் - ஆய்வில் தகவல்
வரும் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வரும் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வரும் நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என்றும், மத்திய, மாநில அரசுகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments