மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பள்ளி மாணவர்களிடம் பாட்டி எனக் கூறிய அமைச்சர்
திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளி மாணவர்களிடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு உங்களுக்கு பாட்டி என கூறியதால் சிரிப்பலை எழுந்தது.
இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் அம்மா விளையாட்டு திட்ட துவக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பள்ளி மாணவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டுகளில் அச்சிடப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை குறிப்பிட்டு உங்களுக்கு பாட்டி எனக் கூறிய அமைச்சர், அவர் தான் இத்திட்டத்தை துவங்கினார் எனக் கூறினார்.
Comments