உக்ரைன் விமான தாக்குதல் -ராணுவத்தினர் 30 பேர் கைது என ஈரான் அரசு அறிவிப்பு
உக்ரைன் விமானத்தை தாக்கி வீழ்த்திய விவகாரத்தில் 30 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
பாக்தாதில் ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது கடந்த 8 ஆம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
அதே தினம், டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கிவ் நகருக்கு புறப்பட்ட விமானம் நொறுங்கி விழுந்ததில் அதில் இருந்த 176 பேரும் கொல்லப்பட்டனர்.
விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என முதலில் கூறிய ஈரான், பின்னர் தவறுதலாக ஏவுகணையால் தாக்கி விட்டதாக கூறியது.
இதை அடுத்து விமானம் தாக்கி வீழ்த்தப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அதிபர் ஹஸன் ரவுகானி அறிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் குலாம்ஹுசைன் இஸ்மாயிலி (Gholamhossein Esmaili)தெரிவித்துள்ளார்.
Comments