அமெரிக்கா - சீனா இடையே நாளை வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவிடம் இருந்து கார், வாகன உதிரி பாகங்கள், விமானம், வேளாண் எந்திரங்கள் உள்ளிட்ட 8000 கோடி டாலர் மதிப்பிலான உற்பத்தி பொருட்களை சீனா கூடுதலாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் நாளை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன துணை பிரதமர் லியுஹி முன்னிலையில் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக இருக்கிறது.
5000 கோடி டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசத்தி துறை சார்ந்த பொருட்கள், 3500 கோடி டாலர் மதிப்பில் சேவைகளைஅடுத்த 2 ஆண்டுகளுக்கு சீனா வாங்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
வேளாண்மை துறை சார்ந்த பொருட்களை 3200 டாலர் அளவுக்கு சீனா கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. விமானம் வாங்க இருப்பது அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என கருதப்படுகிறது.
Comments