டிக்-டாக் மூலம் இளைஞனுடன் ஏற்பட்ட நட்பால் கர்ப்பமான பள்ளி மாணவி

0 1770

டிக்-டாக் மூலம் இளைஞனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், டிக்-டாக்கை தடை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கொடுவாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய அந்த மாணவிக்கும், பல்லடத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞனுக்கும் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் மாணவியை காதல் வலையில் வீழ்த்திய வேல்முருகன், அவரிடம் நெருங்கி பழகியதால் மாணவி 2 மாதம் கர்ப்பம் அடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments