தமிழகம் முழுவதும் 98.5 சதவீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

0 719

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 98 புள்ளி 5 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேசன் கடைகளிலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு விநியோகம் ஜனவரி 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளநிலையில் நேற்று இரவு 8 மணி வரை ஒரு கோடி 96 லட்சத்து 39 ஆயிரத்து 239 ரூபாய்க்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments