திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரச்சனை குறித்து டி.ஆர்.பாலு கருத்து
திமுக - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பிவிட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமியும் முன்வைத்த குற்றச்சாட்டின் காரணமாகவே, காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் கே.எஸ்.அழகிரியின் அறிக்கையால், திமுகவினர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்த டி.ஆர்.பாலு, அதனை தவிர்த்திருக்கலாம் எனவும் கூறினார்.
Comments