SSI சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: சந்தேகத்துக்குரிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள கேரள போலீசார்

0 796

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகளுக்கு நேரடியாக உதவியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளிகள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டி அங்கிருந்து ஆட்டோவில் வந்து இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்பது போலீசாரின் சந்தேகமாக உள்ளது.

அவர்கள் அங்கு தங்குவதற்கு வீடு எடுத்துக்கொடுத்தது முதல் கொலைக்கு மூளையாக செயல்பட்டது வரை உதவியதாக இஞ்சிவிளையைச் சேர்ந்த செய்யது அலி என்பவனை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தலைமறைவாக உள்ள அவனது படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இரு மாநில எல்லையில் 37 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டு கொலை செய்த தவுபீக், அப்துல் சமீம் என்ற இரண்டு பயங்கரவாதிகள் மாறு வேடத்தில் சுற்றி திரிந்தால் எப்படி இருப்பார்கள் என்ற பல உருவங்களிலான புகைபடங்களை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments