பாஜக எம்.பி பிரக்யா சிங்குக்கு அஞ்சலில் விஷ ரசாயனம் அனுப்பியதாக புகார்

0 1019

மர்ம நபர்கள் சிலர், விஷ ரசாயனத்தை அஞ்சல் மூலம் தனது இல்லத்துக்கு அனுப்பிவைத்து மிரட்டியதாக பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எம்.பி பிரக்யா சிங் தக்கூர், போலீசில் புகாரளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில பாஜக எம்பியான பிரக்யா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தனது இல்லத்திற்கு மர்ம நபர்கள் அஞ்சல் உறைகள் சிலவற்றை அனுப்பியதாகவும், அதன் ஒரு உறையில், கொடிய விஷ ரசாயனம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற உறைகளில் உருது மொழியில் எழுதப்பட்ட  கடிதங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஞ்சல் உறைகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments