நெறியற்ற வியாபாரம் வேண்டாம் - மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!
மருத்துவர்களுக்கு பல விதத்தில் ஆசை காட்டி மருந்து விற்கும் பாணியை நிறுத்தாவிட்டால், கடும் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பிரதமர் மோடி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண், பொன்,வெளிநாட்டு உல்லாச பயணங்கள், விலையுர்ந்த பரிசுகள் என மருத்துவர்களுக்கு சலுகைகளை அளித்து வியாபாரத்தை பெருக்கும் நுட்பத்தை பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காலங்காலமாக பின்பற்றுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸைடஸ் கெடிலா (Zydus Cadila) டாரன்ட் ஃபார்மா,(Torrent Pharmaceuticals) வக்கார்ட் (Wockhardt) உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
அப்போது, இது குறித்து அரசின் கவலையை வெளியிட்ட மோடி, நெறியற்ற வகையில் மருத்துவர்களை தூண்டி, வியாபாரம் செய்யும் மருந்து நிறுவனங்களை சட்ட ரீதியாக தண்டிக்கும் வழிகள் பற்றி ஆராயுமாறு, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments