5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் 7.4 சதவீதமாக உயர்ந்த சில்லறை பணவீக்கம்

0 811

5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் சில்லறை பணவீக்கம் 7 புள்ளி 4 சதவிகிதமாக உயர்ந்து காணப்பட்டதாக தேசிய புள்ளியியல் அலுவகம் தெரிவித்துள்ளது.

சில்லறை பணவீக்கம் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விடவும் அதிகமாக உயர முக்கியக் காரணம் இக்காலகட்டத்தில் மிக அதிகமாக உயர்ந்த உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகும்.

அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளான வெங்காயத்தின் விலை டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் அதிகளவில் உயர்ந்த நிலையில் உணவு பணவீக்கம் 14.12 சதவிகிதமாக உயர்ந்தது.

2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் பிப்ரவரி 6ஆம் தேதி நடக்க உள்ள ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணயக் கொள்கை கூட்டத்தில், பணவீக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments