பனிமூட்டத்தால் 15 விரைவு ரயில்கள் தாமதம்

0 816

கடும் பனிமூட்டம் காரணமாக, சென்னை-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் உள்பட 15 விரைவு ரயில்கள் தாமதமாக ஒடுகின்றன என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் காட்சித் திறன் குறைந்து, டெல்லி நோக்கி வரும் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக ஓடுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

இதே போன்று நேற்றும் பல ரயில்கள் தாமதமாக டெல்லியை வந்தடைந்தன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த ஞாயிறு அன்று பனிமூட்டம் உள்ளிட்ட காரணங்களினால் 19 ரயில்கள் தாமதமாக  வந்தடைந்தன. பனிமூட்டம் மற்றும் மாசு ஆகியவற்றால் டெல்லியில் காற்றின் தரம் நேற்று மோசமாக பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments