வடமாநிலங்களில் லோகிரி பண்டிகைக் கொண்டாட்டம்
பொங்கலைப் போன்று வடமாநிலங்களில் லோகிரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
விவசாயிகளுக்கு அறுவடைக் காலமாக இருப்பதால் பயிர்களை அறுவடை செய்யும் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நெல்மணிகள் விளையும் பஞ்சாப் மாநிலத்தில் இந்த பண்டிகை விசேஷமானது.
சீக்கியர்களுக்கு இது புத்தாண்டு தினமாகவும் உள்ளது. போகி கொண்டாடப்படுவதைப் போல இறைவனுக்கு காணிக்கையாக தங்கள் விளைச்சலில் ஒரு சிறுபகுதியை அக்னிக்கு அர்ப்பணம் செய்யும் விவசாயிகள் இனிப்புகளைப் பரிமாறியும் நாட்டுப்புற பாடல்களைப் பாடியும், குளிருக்குத் தீமூட்டி அதை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர்.
Comments