சபரிமலை வழக்கில் 2019ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிக்க உள்ளோம் - தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே
சபரிமலை வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பின் சீராய்வு மனுக்கள் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல்வேறு மதங்களில் பெண்களுக்கு உள்ள பாகுபாடுகள், மத நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா? என்பது உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களையே தாங்கள் பரிசீலிக்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை அழைத்து நீதிமன்ற பதிவாளர் வரும் 17ம் தேதி ஆலோசனை நடத்த வேண்டுமென்றும், அப்போது யார், யார் என்னென்ன வாதாட போகிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Comments