100 நாடுகள் பங்கேற்கும் ராய்சினா மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்
பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை குறித்து விவாதிக்க 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ராய்சினா மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.
சுமார் 700 வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நியுசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.
உலகமயமாதல், தீவிரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், பொருளாதார தேக்க நிலை போன்ற பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்த மாநாடு விவாதிக்க உள்ளது.இவ்விழாவின் தொடக்க உரை நிகழ்த்த இருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் தமது நாட்டை உலுக்கிய பெரும் காட்டுத்தீ காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
Comments