பாமாயில் இறக்குமதி - மலேசியாவுக்கு பதிலடி..!
மத்திய அரசு எச்சரிக்கையை தொடர்ந்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை வணிகர்கள் நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிராக மலேசிய பிரதமர் விமர்சித்து இருந்தார். இதையடுத்து மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஏறத்தாழ அனைத்து வணிகர்களும் தற்போது மலேசியாவை தவிர்த்து, இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதாக கூறப்படுகிறது.
மலேசிய பாமாயில் ஒரு டன் 800 டாலர் என்று விற்கப்படும் நிலையில், இந்தோனேசியாவில் ஒரு டன் 810 டாலருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
Comments