கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறநிலைய துறைக்கு உத்தரவு
கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களை, ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்க கோரிய வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்தபதி, பொறியாளர் உள்ளிட்ட பதவிகளை உருவாக்க இருப்பதாகவும், அதற்காக விதிகளை வகுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை பதிவு செய்த நீதிபதி, அறநிலைய துறை சார்பு பணி விதிகளை 3 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்றார். புதிதாக உருவாக்கபட உள்ள ஸ்தபதி, பொறியாளர் பதவிக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Comments