சென்னையில் நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க ஆளில்லை
சென்னையில் சாலையோரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் கவனிப்பார் இன்றி காய்ந்து போல அவலம் நிகழ்ந்துள்ளது.
தரமணியில் இருந்து கலிகுன்றம் செல்லும் சாலையின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டு, அவற்றின் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்புகளும் வைக்கப்பட்டன.
ஆனால் அதில் 10 மரக்கன்றுகள் மட்டுமே இப்போது தப்பி பிழைத்து தலை நிமிர்ந்துள்ளன. 50 மரக்கன்றுகள் காய்ந்து கருகி உள்ளன. தடுப்புகள் மட்டும் அப்படியே இருக்கையில் மரக்கன்றுகள் மடித்து உள்ளன. முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்காத தால், அவை காய்ந்து போனது தெரியவந்துள்ளது.
சென்னை மாநகரில், மரங்கள் வளர்ப்பதும், அவற்றை பராமரிப்பதுமே, வெப்பநிலை உயர்வை தடுத்து, மழையை கொண்டு வந்து மாநகரின் தாகம் தீர்க்கும் வழியாகும்.
ஆனால் மரங்களை நட சென்னையில் யாருக்கும் போதிய ஆர்வம் இல்லை என்ற நிலையில் நட்ட மரங்களை பராமரிக்கவும் ஆளில்லாத அவலும் இப்போது வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments