பாக்.முன்னாள் அதிபர் முஷரப்புக்கு விதித்த தூக்கு தண்டனை ரத்து
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ராணுவ தளபதியாக இருந்த முஷரப், 1999 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதுடன், 2001 முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார்.
2007 ஆம் ஆண்டு முஷரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு எதிராக அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதே சட்ட விரோதமானது என்று கூறி தண்டனையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முஷரப், தற்போது துபாயில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments