ஐயப்பனின் திருவாபரண பெட்டி ஊர்வலம் தொடங்கியது

0 1125

சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களில் ஊர்வலம் புறப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை மறுநாள் நடைபெறுவதால் பக்தர்கள் அங்கேயே முகாமிட தொடங்கி உள்ளனர். மகரவிளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடந்தது.

அம்பலபுழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தனித்தனி குழுவாக எரிமேலியில் சரணகோஷம் முழங்கி ஆடிப்பாடினர்.
இதனிடையே மகரவிளக்கு பூஜை அன்று சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டுள்ளது.

ஊர்வலம் நாளை மறுநாள் பிற்பகல் சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அன்று மாலை மகர விளக்கு பூஜை நடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments