உள்ளூர் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக தர்பார் – போலீசில் புகார்..! ஊராட்சி தலைவர் ஓட்டம்

0 2737

மதுரை அருகே சிந்துபட்டியில் தர்பார் படம் உள்ளூர் சேனலில் வெளியான விவகாரத்தில் சரண்யா டிவியின் உரிமையாளர்களான சுரேஷ், குபேந்திரன், மணிமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வினியோகஸ்தர் பிரவீன், இந்த சம்பவத்தில் ஜெயபால் என்ற நபர் தேடப்பட்டு வருவதாகவும் அவரது பெயருக்கு பதிலாக தவறுதலாக புகார் மனுவில் ஈச்சம்பட்டி ஜெயராமன் என குறிப்பிடப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

ஊராட்சி தலைவர் ஈச்சம்பட்டி ஜெயராமன், சரண்யா டிவியில் தர்பார் படம் ஒளிப்பரப்பான நேரத்தில் தனது போட்டோவுடன் நன்றி அறிவிப்பு விளம்பரம் மட்டுமே வெளியிட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments