போகிப் பண்டிகையில் காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மாசு கட்டுப்பாடு வாரியம்
போகிப் பண்டிகையையொட்டி காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
போகி தினத்தின் போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட காவல்துறை உதவியுடன் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காற்று தரத்தினை கண்காணிக்க, 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments