ரூ.3000 கோடி இழப்பீடு கோரி ரத்தன் டாடாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோரிடம் 3000 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தாக்கல் செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, பாம்பே டையிங் நிறுவன தலைவர் நுஸ்லி வாடியா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு, டாடா சேர்மன் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்ட போது, தம் மீது, ரத்தன் டாடா அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நுஸ்லி வாடியா குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து சில டாடா குழும நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதூறு வழக்கை மும்பை நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ரத்தன் டாடா, இப்போது சேர்மனாக இருக்கும் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் வாடியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.
Comments