Maradu Flat : கட்டிடங்களை தரைமட்டமாக்கியதால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் போராட்டம்
கேரள மாநிலம் மராடுவில் அடுக்குமாடி கட்டிடங்களை தரைமட்டமாகியதால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி 350 குடியிருப்புகளை கொண்ட 4 அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 2 நாட்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் 75 ஆயிரம் டன் கான்கிரீட் கழிவுகள் உருவானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டிடங்களிலும் நீர்நிலைகளிலும் அடர்த்தியான தூசு படலம் படிந்துள்ளதால் சுவாசப் பிரச்சனை மற்றும் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் மராடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments