ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி பெறுவது உறுதி - கனடா பிரதமர்

0 863

ஈரான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி பெறுவது உறுதி என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கனடா நாட்டைச் சேர்ந்த 57 பேர் உள்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

இதற்கு ஈரான் ராணுவம் பொறுப்பேற்றுள்ள நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த பேரிழப்பு நிகழ்ந்திருக்கக் கூடாது என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த கனடா நாட்டினரின் குடும்பத்துக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments