சென்னையில் மாதாந்திர பயண அட்டைகளுக்கான கட்டணம் இனி டெபிட் கார்டிலும் செலுத்தலாம்

0 783

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு, சலுகை விலை மாதாந்திர பயண அட்டைகளை வாங்க வரும் பயணிகள், இனி டெபிட் கார்டு மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சலுகை விலையில் பயணம் மேற்கொள்ளும் விதமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில், மாதாந்திர பயணச் சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாதந்தோறும் சுமார் 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் இதன் மூலம் பயனடைந்துவருகின்றனர்.

இதற்கான கட்டணத்தை செலுத்தும் பயணிகள், பணம் செலுத்தியே இதுவரை பயண அட்டைகளை பெற்றுவந்தனர். இந்நிலையில் ஸ்வைப் மெசின் மூலம், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகளைக் கொண்டும் பயணிகள் தங்களது கட்டணங்களைச் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments