இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், ஜனவரி 17ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

0 839

நடப்பு ஆண்டில் இஸ்ரோ தனது முதல் செயற்கைகோளை வருகிற 17ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட்30 செயற்கைக்கோள், தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஜிசாட்30 செயற்கைக்கோள் இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பிற்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments