மாட்டுப்பொங்கல் அன்று சென்னையை சுற்றிக்காட்ட சிறப்பு ஏற்பாடு

0 701

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வரும் 16ம் தேதி சென்னை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்களை 10 ரூபாய் கட்டணத்தில் கண்டு ரசிக்கலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை10 ரூபாய் கட்டணத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான 15 சொகுசுப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் தொடங்கி மெரினா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலஷ்மி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தையோ அல்லது http://www.tamilnadutourism.org/  என்ற இணையதள முகவரியையோ தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments