வாழ்வின் மிகப்பெரிய ஆசையை வெளியிட்ட நடிகர் ஜெயராம்.! தமிழ் ரசிகர்கள் வரவேற்பு
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயத்தில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற கின்னஸ் முயற்சியில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ஜெயராம், தாம் செண்டை மேள கலைஞராக இருந்தாலும் தமிழகத்தின் பாரம்பரிய கலையான தப்பாட்டத்தை கற்க மிகவும் ஆவலாக இருப்பதாக கூறினார்.
எத்தனை கருவிகளை வாசித்தாலும் தப்பாட்டம் கற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். செண்டை என்பதும் சொல்ல போனால் தமிழக இசை கருவி தான். செண்டையின் துவக்கம் தமிழகம் தான். இந்தியா மட்டும்மல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பலர் ஆர்வமாக செண்டை இசைக்க பயின்று நிறைய விழாக்களை களைகட்ட செய்கின்றனர். இதனை பார்த்து மகிழ்ச்சியடைவதாக கூறினார் ஜெயராம்.
சிறு வயதில் இருந்தே மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட பல இசைக்கருவிகளில், இசைக்க கற்று கொண்டுள்ளேன். இருந்தும் எனக்கு வாழ்க்கையிலேயே மிக பெரிய ஆசை என்னவென்றால், தமிழக கிராமிய கலாச்சார இசையான தாரை தப்பட்டை இசையை கற்க வேண்டும் என்பதே. அதற்கு நேரம் விரைவில் கூடி வரும் என நம்புகிறேன்.
வாழ்க்கையிலேயே நான் இதுவரை கேட்டதிலேயே சரியான ரிதம் உள்ளதென்றால் அது தாரை தப்பட்டை இசையில் தான் என்றார் நடிகர் ஜெயராம். நடிகர் ஜெயராமின் இந்த ஆசைக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் முறையாக தாரை தப்பட்டை கற்று கொண்டு கலக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
Comments