டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்தது பாஜக

0 720

7 மணி நேரம் நீண்ட மாரத்தான்  ஆலோசனைக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவைத் தேர்லுக்கான முதல் கட்ட 45 வேட்பாளர்களை பாஜக முடிவு செய்துள்ளது.

வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பாஜகவின் முக்கிய கூட்டம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் நேற்று இரவு 8 மணிக்குத் துவங்கியது.

இன்று காலை 3 மணி வரை நீண்ட இந்த கூட்டத்தின் முடிவில் 45 இடங்களுக்கான வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா, டெல்லி தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கட்சித் தலைமை மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில், பல புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments