இளவரசரின் முடிவு குறித்து ராணி எலிசபெத் இன்று அரச குடும்பத்தினருடன் ஆலோசனை

0 1010

 பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து இளவரசர் ஹேரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக அறிவித்தது குறித்து ராணி எலிசபெத் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பொருளாதார ரீதியில் தனித்து இயங்க விரும்புவதால், அரச குடும்பத்திலிருந்து விலகி வசிக்க முடிவு செய்திருப்பதாக ஹேரியும், மேகனும் அண்மையில் அறிவித்தனர். இது அரசகுடும்பத்திலும், லண்டன் மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினருடன் ராணி எலிசபெத் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அப்போது அரசகுடும்பத்திலிருந்து விலகும் முடிவை கைவிட செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் அல்லது, விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments