படப்பிடிப்பிற்கு தேவையெனக்கூறி குழந்தை கடத்தல்

0 1150

சென்னையில் 7 மாத ஆண் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரன்தீசா போஸ்லே என்பவர் சென்னை கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரை அணுகிய 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படப்பிடிப்பிற்கு குழந்தை வேண்டும் என்றும், தேவையான பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.

பணம் கிடைக்கும் ஆசையில் குழந்தை ஜானை அந்த பெண் கூட்டிச் செல்ல தாய் சம்மதித்துள்ளார். ரன்தீசாவையும், அவரது மாமியாரையும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கும் பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் அந்த பெண் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். குழந்தையை மருத்துவரிடம் காட்டிவிட்டு வருவதாகக் கூறி சென்றவர் திரும்ப வராததால் குழந்தையின் தாய், பாட்டி இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக புகாரின் பேரில், குழந்தையுடன் மாயமான (மஞ்சள் சேலையணிந்த) பெண்ணை சிசிடிவி காட்சிகள் உதவியுடன், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை போலீசார் தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments