பிலிப்பைன்ஸ்சில் புகையை உமிழ்ந்து வரும் டால் எரிமலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பால் மலைப்பகுதியில் உள்ள 8 ஆயிரம் குடும்பத்தினைரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் உள்ள டால் என்ற எரிமலை தற்போது சாம்பலையும் நெருப்புக் கற்களையும் வீசி வருகிறது.
எரிமலையில் இருந்த வெளியேறும் சாம்பல் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வீசப்படுவதால் காற்றின்வேகத்தில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் எரிமலையை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் குழுவினர், அடுத்த சில வாரங்களில் டால் எரிமலை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
Comments