குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மம்தா, மாயாவதி மறுப்பு

0 902

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜியும், மாயாவதியும் மறுத்துள்ளனர்.

அடுத்தகட்ட போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியாகவும், இந்த கூட்டம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments