நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்தில் விளையாடவிருக்கும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24ந் தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் டி20 போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்த அணியில் ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயார் அய்யர், மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பந்த், சிவம் துபே, குல்தீப் யாதவ், சஹால், சுந்தர், பும்ரா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் பெயர் இந்த அணியில் இடம்பெறவில்லை.
Comments