முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு விரைவில் வாபஸ்...!

0 1224

முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள முக்கிய பிரமுகர்களுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் முறியடிப்பு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியை கவனிப்பதால் என்.எஸ்.ஜி-யை உருவாக்கிய நோக்கமே முழுமையாக நிறைவேறுவதில்லை என மூத்த அரசு அதிகாரி கூறியுள்ளார்.

எனவே இனி என்.எஸ்.ஜி கமாண்டோ படையினர் இனி பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் முறியடிப்பு பணிகளை மட்டுமே கவனிப்பார்கள்.அதற்கேற்றவாறு முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணிகளில் இருந்து விரைவில் என்.எஸ்.ஜி கமாண்டோ படை விலக்கி கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள ராஜ்நாத்சிங், அத்வானி, சந்திரபாபு, பாதல் உள்ளிட்ட 13 பேருக்கு இனி சி.ஆர்.பி.எஃப்., சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

450 கமாண்டோக்கள் விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்படுவதன் மூலம், என்எஸ்ஜியின் திறனுக்கு மேலும் வலுசேர்க்கும். ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்தால் அதனை சமாளிக்க போதுமான கமாண்டோ வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்தே மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments