புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பணியில் இருந்த போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த கொடூரம்..

0 967

புதுச்சேரியில் புத்தாண்டின் போது பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கும் நிலையில், விபத்து பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தின் தலைமை காவலர் சுப்பிரமணியன், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அரியாங்குப்பத்தில் பணியில் இருந்தார். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதனை சரி செய்ய நோணாங்குப்பத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அரியாங்குப்பம் சந்திப்பில் திரும்ப முயன்ற போது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் அதிவேகமாக சென்ற மூவர் போக்குவரத்து காவலரின் வாகனம் மீது மோதினர்.

விபத்தின் போது தலைகவசம் அணியாததால் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்ற காவலர்,சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசு உதவ முன்வரவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments