கார்ப்பரேட் நிறுவன ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: சுட்டுக்கொன்றவர்களை கைது செய்யக்கோரி தொடரும் போராட்டம்
டெல்லியின் புறநகரான நொய்டாவில், கார்ப்ரேட் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கெளரவ் சந்தல், சில தினங்களுக்கு முன்பு, பணி முடிந்து, இரவில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, உத்திரப்பிரேதச காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நாட்கள் பல கடந்தும், குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும், கெளரவ் சந்தல் மரணத்திற்கு நீதி கேட்டும், கிரேட்டர் நொய்டா பகுதி குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரப்பிரதேச அரசு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
Comments