நடுவானில் விமானத்துக்கு இளம் பெண் வெடிகுண்டு மிரட்டல்
கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற ஏர்ஏசியா விமானத்தில் பயணித்த இளம் பெண் ஒருவர் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
மோகினி மண்டல் என்ற பயணி பணிப்பெண் மூலம் விமானிக்கு கொடுத்தனுப்பிய குறிப்பில் தான் உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருப்பதாகவும், விமானத்தை வெடிக்கச் செய்யப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விமானத்தை கொல்கத்தாவுக்கு விமானி திருப்பி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். பாதுகாப்புப் படையினர் விமானத்துக்குள் சென்று அந்தப் பெண்ணை வளைத்துப் பிடித்த போது அவரது உடலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது.
விசாரணையில், அந்தப் பெண் தனது தந்தையின் செய்தி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவித்த நிலையில், அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments