லடாக்கில் நிலநடுக்கம்.. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம்..!
யூனியன் பிரதேசமான லடாக்கில், மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால், அச்சமடைந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சமடைந்தனர். உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என கூறப்படும் நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
Comments