டால் எரிமலை வெடித்து சிதறியதில் 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் மண்டலம்

0 870

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள டால் எரிமலையிலிருந்து (Taal volcano) 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வீசப்பட்டு வருவதால் அப்பகுதியே புகைமயமாக காட்சியளிக்கிறது.

மணிலாவின் தெற்கு பகுதியிலுள்ள அந்த எரிமலை பலத்த சத்தத்துடனும், அதிர்வுகளுடனும் வெடித்து சிதறி வருகிறது. அந்த எரிமலையிலிருந்து சாம்பலும், கொதி நீரும் 1 கிலோ மீட்டர் தூர உயரத்துக்கு வானை நோக்கி வீசப்பட்டு வருகிறது.

எரிமலை வெடித்து சிதறுவதால், அதை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments