கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் சைக்கிள், மோட்டார் சைக்கிள், இன்னொரு கார் மீது மோதல்
ஹரியாணா மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் இன்னொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
யமுனா நகர் பகுதியில் வேகமாக சாலையில் வந்த கார் ஒன்று, சாலையோரம் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தோர் மீது மோதி தள்ளியது.
பிறகு எதிர்திசையில் திரும்பி அங்குள்ள கடை ஒன்றின் வெளியே வைக்கப்பட்ட பொருள்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments