இந்திய ஸ்மார்ட் டிஜிட்டல் சேவையில் ஜப்பானின் NEC கார்ப்பரேசன்

0 1260

இந்தியாவின் ஸ்மார்ட் டிஜிட்டல் (Smart Digital) சேவைகளில் ஈடுபட்டு, அடுத்த 5 ஆண்டுகளில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, வருவாய் ஈட்ட ஜப்பானின் என்.இ.சி கார்ப்பரேசன் என்ற நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

சென்னை - அந்தமான் நிக்கோபார்(Andaman & Nicobar) தீவுகளுக்கு இடையே, கடலுக்கு அடியில், 2 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு, கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டத்தையும் இந்நிறுவனம் முன்னெடுக்கிறது.

தற்போது, 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஆதார் (Aadhaar) சாத்தியம் என்ற நிலையில், குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள்ளாக இருந்தால் கூட, அக்குழந்தைகளின் கைரேகையே கண்டறிந்து, ஆதார் வழங்க வழிவகுக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

முகம், கருவிழி, விரல்ரேகை, கைரேகை உள்ளிட்டற்றை ஆதாரமாக கொண்டு இயங்கவல்ல பயோ-ஐடியோம் ("Bio-IDiom") என்ற நுட்பத்தின் மூலம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிமையாக்க முடியும் என்றும் ஜப்பானின் என்இசி கார்ப்பரேசன் கூறியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments