உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்

0 4434

உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதில் 82 ஈரானியர்கள், கனடாவின் 63 பேர், உக்ரைனின் 11 பேர் உட்பட ஸ்வீடன், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த 176 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பதற்றமான வான்பறப்பில் பறந்தததால் தவறுதலாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

அமீர் கபீர் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று கனடாவில் குடியேறிய சிலரும் விபத்தில் உயிரிழந்ததால், பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments