தமிழகத்தில் 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் (prevention of cruelty to animals, 1960) தடுப்பு சட்ட 2ஆவது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை (rachandar tirumalai) கிராமத்திலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா சூரியூர் (Sooriyur), மருங்காபூரி தாலுகா ஆவாரங்காடு, மணப்பாறை தாலுகா பூதமெட்டுபட்டி, கருங்குளம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments