ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திரும்ப வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் வேண்டுகோள்

0 6016

இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை எழும்பூரில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், சண்முகம் உள்ளிட்டோர் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேசினர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு முறையான படிப்பு, வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரை தொடர்ந்து பேசிய விக்னேஸ்வரன், ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments