குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் காயம்
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.
குப்பைத் தொட்டி அருகே செல்வம் என்பவர் பழைய பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதில் செல்வத்தின் கைவிரல்கள் துண்டாயின.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் மேற்கொண்ட ஆய்வில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என தெரியவந்தது.
கடந்த மாதம் இங்கு நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments