பூரண உடல்நலம் பெற்று விரைவில் மீண்டு வருவேன்: விஜயகாந்த்

0 1951

விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் 101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கி பேசிய விஜயகாந்த், தனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமக்கு முதல் கடவுள் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி ஈட்டியிருப்பதாகவும், அதனால் தமிழக அரசியலில் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.

அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments